வவுனியா மாவட்ட முதியோர் சங்கங்களுக்கிடையே பொதுஅறிவு வினாடிவினாப் போட்டி

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூகசேவை அலுவலகம் , மாவட்ட மட்டத்தில் முதியோர் சங்கங்களுக்கிடையே பொது அறிவு வினாடி வினாப்போட்டியை வருடாந்தம் நடாத்தி வருகிறது.

இந்த வருடப்போட்டிகள் நேற்று 27.10.2017 வெள்ளிக்கிழமை காலை மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு சங்கங்கள் இடையே நெடுங்கேணி , பூந்தோட்டம் , வவுனியா நகரம் , பண்டாரிகுளம் முதியோர் சங்கங்கள் சிறப்பாக பங்குபற்றி முதலாம் இடத்தை திரு து. சண்முகராஜா தலைமையில் பண்டாரிகுளம் முதியோர் சங்கமும் இரண்டாம் இடத்தை திரு தா. சலசலோசன் தலைமையில் வவுனியா நகர முதியோர் சங்கமும் மூன்றாம் இடத்தை திரு . வி. மாசிலாமணி தலைமையில் பூந்தோட்டம் அணியும் நான்காம் இடத்தை க.முத்துகுமார் தலைமையில் நெடுங்கேணி அணியும் பெற்றுக்கொண்டன.

போட்டியை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நடாத்தினார் .

நிகழ்வுகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி தி.கலைவாணி நெறிப்படுத்தினார் . மத்தியஸ்தர்களாக திரு .வசந்தன் திரு.நிப்ராஸ் ஆகியோர் கடமையாற்றினர் .

வவுனியா வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி பி .விமலேந்திரன் , திருமதி கலா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like