தங்க சங்கிலியை திருடி கையடக்கத் தொலைபேசி வாங்கிய இளைஞர்

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு பவுன் தங்க சங்கிலியை திருடி விற்பனை செய்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்றைய தினம்(28) உத்தரவிட்டுள்ளார்.

தல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த 19வயதுடைய இளைஞரே அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த வீடொன்றில், இரண்டு பவுனுடைய தங்க சங்கிலியை திருடி முப்பதாயிரம் ரூபாயிக்கு விற்பனை செய்துள்ளார்.

குறித்த பணத்தில், கையடக்கத் தொலைபேசி வாங்கியுள்ளதாகவும், உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் நேற்று(27) கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like