வவுனியாவில் ‘வவுனியா பசங்க’ அமைப்பினர் பாத்தினீயம் ஒழிப்பு செயற்றிடத்தில்

‘பாத்தீனியம் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (29.10.2017) காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை ‘வவுனியா பசங்க’ அமைப்பினரால் இன,மத,பேதமின்றி வவுனியா பட்டானீச்சூர் , சாலம்பைக்குளம் போன்ற பகுதிகளில் வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

தற்போது வவுனியாவில் பாத்தினீயம் அதிகரித்து காணப்படும் இந் நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட ‘வவுனியா பசங்க’ அமைப்பினர் இவ்வாறான சமுக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  (22.10.2017)  வவுனியா வைரவப்புளிங்குளம் சிறுவர் பூங்கா வீதி, நகரசபை ஊழியர் விடுதி வீதி என்பற்றில் பாத்தீனியம் ஒழிப்பு செயற்றிட்டத்தில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களும் தொடர்பு கொள்ளவும்

தலைவர் – பா.கதீஷன் (077 – 2661413)
செயலாளர் – பா.லம்போதரன் ( 077 – 0879746)
பொருலாளர் –  பா.சிந்துஜன் ( 077 – 5108572)

You might also like