கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 25-01-2017 காலை 11 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து பாடசாலை அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

குறித்த பாடசாலைகளுக்கு கடந்த ஆண்டு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை சமூகத்தால் முன்வைக்கப்பட்ட குறித்த பாண்ட் வாத்திய தொகுதிக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள்   தனது பிராமண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து (CBG) ஒதுக்கி அவர்களுக்கான பாண்ட் வாத்திய தொகுதியை கொள்வனவுசெய்து வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வின்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்களும் வடக்கு சுகாதார அமைச்சர் அவர்களின் இணைப்புச் செயலாளர் ப.சீலன் அவர்களும் கலந்துகொண்டனர்.

You might also like