ப்ரைட் ரைஸ் கிடைக்காததால் சிறுவன் தற்கொலை : இலங்கையில் சம்பவம்

காலி – ஹினிதும ஓபான பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஓபான மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த 8ஆம் தர மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காலை குறித்த மாணவர் தனது தந்தையுடன், ஹினிதும நகருக்கு சென்றுள்ள போது, ஃப்ரைட் ரைஸ் (fried rice) வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

இதனை அவரது தந்தை மறுத்துள்ளதனை தொடர்ந்து வீடு திரும்பி, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஹினிதும பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like