வவுனியாவில் இராணுவ அதிகாரியின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்து : இளைஞன் காயம்
வவுனியாவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (30.10.2017) காலை 6.30மணியளவில் இராணுவத்தின் உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனோருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரானுவ அதிகாரி பயணித்த சொகுசு ரக கார் ஈரப்பெரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த உதயலக பிரியதர்சன (21வயதுடைய) இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொகுசு ரக காரில் பயணித்த இரானுவ அதிகாரி மாங்குளம் இரானுவ முகாமில் பணியாற்றுவதாகவும் மேலதிக விசாரணைகனை மேற்கொண்டு வருவதாவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.