கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே வவுனியா கோயில்புளியங்குளம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியால மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றினைந்து ஆசிரியரை இடமாற்ற வேண்டாமேன எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.10.2017) காலை 8.00 மணி தொடக்கம் 9.30மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணித பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை தடை செய் , கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே , கல்வி வலயமே பதில் கூறு , வேண்டும் வேண்டும் எங்கள் கணித பாட ஆசிரியர் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சுமார் ஒன்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக போராட்டத்தில் இடம்பெற்றிருந்தது.
போராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ( ஓமந்தை ) சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் , பெற்றோர்களுடன் கலந்துரையாடி ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக வாக்குறிதியளித்தார்.
அதனையடுத்து மாணவர்கள் கற்றல் நடவடிக்கைளுக்காக பாடசாலைக்குள் சென்றனர்.
பாடசாலை ஆசிரியர்கள் (சிலர்) , அதிபர் 8.10மணிக்கு பின்னரே பாடசாலைக்கு வருவதனை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இப் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் கா.போ.த உயர் தர வரை வகுப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.