வவுனியாவில் நாளையதினம் பூரண கரத்தால் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்

வவுனியாவில் நாளையதினம் ( 26.01.2017) வர்த்தகர்கள் கடையினையடைத்து எமது காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வவுனியா மாவட்ட இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

மேலும் நாளையதினம் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் இவ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைதி ஊர்வலம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன் வவுனியா மாவட்ட இளைஞர்களும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

மூன்று தினங்களாக நீர் உணவின்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் எமது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்

You might also like