மாவீரர் தினத்திற்கு தயாராகும் கிளிநொச்சி மக்கள்

மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கும் நோக்கில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றிலிருந்து சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

கிளிநொச்சி, கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த ஆண்டு முதல் போரில் உயிரிழந்த வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதுபோல இவ்வருடமும் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக பல்வேறு சிரமதானப் பணிகள் குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் பணிக்குழுவின் ஏறபாட்டில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like