வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : ஒருவர் காயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (30.10.2017) மதியம் 12.15மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கில் திரும்ப முற்பட்ட சமயத்தில் கோரவப்போத்தானை வீதியிலிருந்து யாழ் வீதி நோக்கி பயணித்த பட்டார ரக வாகனம் மோட்டார் சைக்கிலிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like