உண்ணாவிரத போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கவுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆதரவளிக்கவுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் நாளை காலை 8 மணியளவில் சாரதிகள் சங்கத்திலிருந்து அமைதி ஊர்வலமாக பஜார் வீதி வழியாக சென்று உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களுடன் இணையவுள்ளதாக சாரதிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விடுதலையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இப்போராட்டத்தில் ஐந்நூறு பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் சிவலிங்கம் ரவீந்திரன் தெரிவித்தார்.

You might also like