வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோ்ககிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like