பெற்றோர்கள் இறக்கும் வரை உண்ணாவிரதத்திற்கு தயார் : வவுனியாவில் சுவரோட்டிகள்
பெற்றோர்கள் இறக்கும் வரை உண்ணாவிரதத்திற்கு தயார் , போலித் தீர்ப்பு வேண்டாம் , சயிட்டத்தை ரத்து செய் என்ற வாசகங்களை தாங்கிய சுவரோட்டிகள் இன்று (31.10.2017) வவுனியா நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இச் சுவரோட்டியில் சயிட்டத்திற்கு எதிரான மாணவ இயக்கம் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இச் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சயிட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை இரத்துச் செய்து அதனை இலாப நோக்கமற்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அரசாங்கத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரிந்துரை செய்தது. அதன் பிரதிபளிப்பாகவே இச் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.