வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களால் கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

வவுனியா விபுலானந்தாக் கல்லூரி ஜனாதிபதி விருதுபெற்ற சாரணர்கள் இணைந்து இன்று (31.10.2017) ஜனாதிபதி சாரணன் திரு.ஸ்ரீ.வித்தகன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு  வவுனியா கூமாங்குளம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் கல்வி கற்றலை விருத்தி செய்யும் வகையில் காகிதாதிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் விபுலாநந்தாக் கல்லூரி சாரணர்கள் சார்பாக திரு.ச.சுகிரதன், திரு.வ.பிரதீபன், திரு.சி.துஜான், திரு.வி.ஷஜீவ்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like