வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.சற்சுருவேணு ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை 28,29 ஆகிய இரு தினங்கள் செட்டிக்குளம் மகா வித்தியாலயம், கண்ணாட்டி கணேசபுரம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலைத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் அமைந்திருந்த இப்பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக வவுனியா சுதந்திர அரங்கின் உருப்பினர்களான திரு.சிவராசா பிரதீப், நாடக கலாவித்தகர் திரு.சிவசுப்பிரமணியம் துஜான் ஆகியோரும் நாடக ஆசிரியர் திரு. பார்த்தீபன் அவர்களும் பங்குபற்றியிருந்தார்.