வவுனியா பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

வவுனியா பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து அனுராதபுரம் தம்புதேகம பகுதிக்குச் செல்லவதற்காக வவுனியா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சந்தேகநபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிஸார் குறித்த நபரின் கை பையினை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது தொடர்ந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்தோடு, அவரிடமிருந்த கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

You might also like