விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திவிட்டார்! சீ.வி.ஆதங்கம்
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திவிட்டார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது அவரின் பொறுப்பற்றதனத்தையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் எவ்வித தொடர்புகளும் கிடையாது என்று கூறியதாக எனக்கு சொல்லப்பட்டது.
இந்நிலையில், அரசியல் தேவைகளுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைப் புலிகள் என அடையாளப்படுத்தி, தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
எனவே, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விவகாரத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.