வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (01.11.2017) காலை 11.00மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி இ.போ.சபையில் 3கிலோ610கிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்திச்சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

You might also like