வவுனியாவில் ஆலயத்தில் விசமிகள் கைவரிசை: விகிரகங்கள் துாக்கி வீசப்பட்டன!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரகங்கள் விசமிகள் சிலரால் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன் சிலைகள் சில சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஆலயத்திற்கு சென்றவர்களால் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like