வவுனியா கனகராயன்குளத்தில் தேசிய போதைப்பொருள் மீட்சி நிகழ்ச்சித்திட்டம்
சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய தேசிய போதைப்பொருள் மீட்சி நிகழ்ச்சித்திட்டம் “வவுனியா பசங்க” அமைப்பின் அனுசரணையில் கனகராயன்குளம் பெரியகுளம் அ.த.க பாடசாலையில் இன்று (02.11.2017) வியாழக்கிழமை மு.ப 8.00 மணிக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலாம் கட்ட நிகழ்வாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார , சுகாதார வைத்திய அதிகாரி சு.ரட்சாயினி உள்ளிட்ட பல பிரமுகர்களால் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அமைதி ஊர்வலம் கனகராயன்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து பெரியகுளம் அ.த க பாடசாலையினை சென்றடைந்ததுடன் ‘போதையற்ற நாடொன்றை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன
வவுனியா வடக்கு உதவிப்பிரதேச செயலாளர் கே.நிவேதிகா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தலைமை உரை , வீதி நாடகம் (கனகராயன்குளம் மகாவித்தியாலம் மாணவர்கள்) , விருந்தினர்கள் உரை , சான்றிதழ் வழங்கும் வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
இந் நிகழ்வில் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் வவுனியா வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.கலா , வவுனியா பசங்க அமைப்பின் செயலாளரும் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவருமாகிய பா.லம்போதரன் , புன்னகை அமைப்பு க.சர்மிலன் , சமூக ஆர்வலர் மு.குணசிங்கம் , பிரதேச செயலக உத்தியோகத்தர்களான சு.சோபனா, பூ.செல்வநீதன் , சி.சிறிதரன் எஸ் கஜேந்திரன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் வி.பிறேமநிதி, பெரியகுளம் அ.த.க பாடசாலை மற்றும் கனகராயன்குளம் மகா வித்தியால அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கனகராயன்குளம் ஆட்டோ சாரதிகள் சங்கத்தினர், பெரியகுளம் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
.நன்றியுரையினை சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் வவுனியா வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.கலா நிகழ்த்தினார்.