வவுனியா கூமாங்குள முதியோர் சங்க கட்டிடட திறப்பு விழாவும் முதியோர் தின விழாவும்

கூமாங்குளம் முதியோர் சங்க கட்டிடட திறப்பு விழாவும் முதியோர் தின விழாவும் கூமாங்குளம் முதியோர் சங்க கட்டிடத்தில் இன்று (02.11.2017) காலை 10.30மணியளவில் முதியோர் சங்க தலைவர் நா. முனுசாமி தலைமையில் இடம் பெற்றது.

முதியோர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன் முதியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மூக்குக்கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் வனாஜா , மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்சொல் இனியன் ஸ்ரீநிவாசன், ஆசிரியர் , கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் மா.சுரேந்திரன், அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற பொது செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் சோபனா, அ.பிரகாஷினி, அபிவிருத்தி உத்தியோகத்தர் கமாலாம்பிகை,  பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், முதியோர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like