சற்று முன் வவுனியாவில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது ( படங்கள் இணைப்பு)

வவுனியாவில் கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்று வந்த உண்ணாவிரதம் நிறைவிற்கு வந்தள்ளது

வவுனியாவில் கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்ற கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற் ஆக்கப்பட்ட உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதம் இன்று (26.01.2017) மாலை 6.00மணிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தனாவினால் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த 14பேருக்கு எழுத்து மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்கறுதியளித்தமையடுத்து கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்று வந்த உணவு தவிர்ப்பு தண்ணீர் வழங்கி முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம்

மாசி மாதம் 09ம் திகதி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ்மா அதிபர் , நீதியமைச்சர் இவர்களுடன் 16பெயர் கொண்ட குழுவும் அருட்தந்தையர்களும் சந்திப்பார்கள்

இக் கூட்டம் மாசி மாதம் 09ம் திகதி காலை11.00மணிக்கு அலரிமாளிகையில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like