வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று மின்தடை

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார புனரமைப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம், சாளம்பைக்குளம் வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும், காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like