வவுனியாவில் உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று (26.01.2017) மாலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய வவுனியா இளைஞர்களின் ஆதரவுப் போராட்டம் பிரதான வீதி கண்டி வழியாக உணவு தவிர்ப்பு இடம்பெற்று வரும் இடத்திற்கு ஊர்வலமாக வந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதில் பெருமளவாக இளைஞர்கள கலந்து கொண்டனர்.

எனினும் தற்போது உண்ணாவிரதம்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தனாவினால் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த 14பேருக்கு எழுத்து மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்கறுதியளித்தமையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

You might also like