வவுனியாவில் ‘முதுசித்தம் சஞ்சிகை’ வெளியீடும் ஒன்று கூடலும்

கல்வியியல் முதுமாணி அணி (IV) 2015/ 16 உயர் பட்டப்படிப்புகள் பீடம் (வவுனியா நிலையம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ‘முதுசித்தம்’ சஞ்சிகை வெளியீடும், ஒன்றுகூடலும் இன்று (03.11.2017) காலை 10.00 மணிக்கு வவுனியா றோயல் கார்டன் மண்டபத்தில் மாணவர் மன்றத் தலைவர் ல.சதீஸ்குமார் தலமையில் இடம்பெற்றது.

கல்வியியல் முதுமாணி மாணவி சூரியாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் ம.ஜெயப்பிரகாஷ் அவர்களின் வரவேற்புரை , முதுசித்தம் சஞ்சிகை வெளியீடு , சு.ஜெயச்சந்திரன் அவர்களின் வெளியீட்டுரை , இ.குபேசன் அவர்களின் நயப்புரை , கா.திருமகன் அவர்களின் ஏற்புரை, க.சின்னத்தம்பி அவர்களின் சிறப்புரை , விருந்தினர்கள் உரை, கௌரவிப்பு நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்கினேஸ்வரன் , கௌரவ விருந்தினராக உயர் பட்டப்படிப்புகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதி கு.மிகுந்தன் , விசேட விருந்திராக வவுனியா வாளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதல்வர் த.மங்களேஸ்வரன் , விருந்தினர்களாக பேராசிரியர் க.சின்னத்தம்பி , விரிவுரையாளர்களான ஆ.நித்திலவர்ணசன் , க.கனகலிங்கம் , வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி கு.சிதம்பரநாதன், உயர் பட்ட படிப்புகள் பீட உதவி பதிவாளர் சி.குபேசன் , ம.ஜெய்பிரகாஷ் , புளியங்குளம் ஆசிரியர் நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் , முதுசித்தம் இதழாசிரியர் கா.திருமகன் , மாணவர் மன்ற செயலாளர் ச.சுபாஸ்கரன், ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like