வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (03.11.2017) காலை 11.00மணியளவில் 4கிலோ 105கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.ஜ சுபசிங்க தலைமையிலான பி.எஸ் அனுர (43210), பி.சி ஹேரத் (40117), பி.சி பண்டார (14957), பி.சி பிரதீப் (45980), பி.சி சாரங்க (820049), பி.சி குமார (66201), பி.சி சமதுங்க (52389) ஆகிய பொலிஸ் குழுவினர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபரிடம் சோதனையிட்ட சமயத்தில் 4கிலோ105கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த 25வயதுடைய புத்தளத்தினை சேர்ந்த நபரோருவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.