‘வவுனியா பசங்க’ அமைப்பினரால் முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா ஒமந்தையில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட முன்னாள் போராளிகள் இருவருக்கு ‘வவுனியா பசங்க’ அமைப்பினரினால் இன்று (03.11.2017) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் அவர்களின் நிதியில் ஒருவருக்கு சுமார் ரூபா 6500.00 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியோன்றும் சிறு பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டத்தில் வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் பா.கதீஷன் , பொருளாளர் பா.சிந்துஜன் , ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை வந்த நடாராஜா சிவகுமார் அவர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறான பல முன்னாள் போராளிகள் கை,கால்களை இழந்து ஒரு வேலை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கின்றனர். புலம்பெயர் உறவுகளை எமக்காய் போராடிய எமது முன்னாள் போராளிகளுக்கு உதவ முன்வருமாறு வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

வவுனியா பசங்க அமைப்பினர் தொடர்புகளுக்கு – 077 266 1413

You might also like