வவுனியாவில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு சம்பவம்

வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வியாபார நிலையத்தின் மின்வாசிப்பு மானியொன்று இன்று (03.11.2017) பிற்பகல் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எனினும், இதன்போது வியாபார நிலையத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தமொன்று தடுக்கப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையத் தொகுதியிலுள்ள மின்வாசிப்பு மானியொன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வெளியே சென்று பார்த்துள்ளதுடன், எரிந்த நிலையிலிருந்த மின்சார வயரினை துரிதமாக அணைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மின்சார சபைக்கும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் விசாரணைணகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவத்தின் போது வியாபார நிலைய உரிமையாளர் துரிதமாக செயற்பட்டதால் வியாபார நிலையங்களுக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like