வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சி ,முல்லைதீவு , வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாகளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இன்று வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் என்ற மனிதாபிமான தொண்டர் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கனகபுரம் வீதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அருகாமையில் இந்த தொண்டு நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி றோயல் முன்பள்ளி முதல்வர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கான பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்துவைத்தார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக கனகபுரம் கிராம அலுவலர் மற்றும் குருக்கள், பாதிரியார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆசிச்செய்தியினையும் வழங்கினர்.

You might also like