கிளிநொச்சி, முகமாலையில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை

கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி மிக விரைவில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றுவதிலுள்ள தாமதம் காரணமாக தற்போது 258இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளபோதும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக வெளியிடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக இதுவரை மீள்குடியேற்றப்படாத நிலையில் பிற இடங்களில் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் அவர்களது வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகமாலைப்பகுதி என்பது மிகவும் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது. இப்பகுதியில் வெடிபொருட்களை அகற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்ற பகுதியாக இது காணப்படுவதனால் அதிகளவான வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்த தன்னார்வத்தொண்டு நிறுவனமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பிரதிநிதி,

தற்போது ஒரு பகுதி வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. அதனை மிக விரைவில் மக்கள் மீள்குடியேறுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like