கஞ்சா விற்பனை நிலையமாக மாறும் வவுனியா பேரூந்து நிலையம்

வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (04.11) காலை 10.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வவுனியா பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

யாழ்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி செல்ல இருந்த 45 வயதுடைய பரமசாமி ராமநாதன் என்பவரை வவுனியா பேரூந்து நிலையத்தில் சோதனை செய்த போதே அவரது உடமையில் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுவதுடன் குறித்த நபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like