வவுனியாவில் கையும்மெய்யுமாக பிடிபட்ட இரண்டு திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று (04.11.2017) காலை 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்த சம்பவமோன்று இடம்பெற்றது.

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் பகுதியில் வீதியில் நடந்து வந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரிக்க முயன்ற வேளையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களாலும், பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களின் மோட்டார் சைக்கில் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரையும் தற்சமயம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like