வவுனியாவில் அமைச்சர் சுவாமிநாதனினால் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

வவுனியா நகர பிரதேச செயலகத்தின் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04.11.2017) காலை 10.00 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலமையில் இடம்பெற்றது.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் அமைச்சினால் 2017ம் ஆண்டிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் முகமாக வவுனியா நகர பிரதேச செயலகத்தில் 134 பயனாளிகளுக்கு 133 இலட்சம் ரூபாய் பண ஒதுக்கீட்டில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சுயதொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கால்நடைகள் போன்றவற்றை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கருணாதாச , அமைச்சின் செயலாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன்,

எமது அமைச்சினால் வவுனியாவில் இவ்வருடம் 549மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 678 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருவதாகவும் , 100மில்லியன் நிதி ஒதுக்கிட்டில் 35 பயணாளிகளுக்கு சிறு நீர்த்தாங்கிகளுக்கான அபிவிருத்தி திட்டம் , 45மில்லியன் நிதி ஒதுக்கிட்டில் 49 பயனாளிகளுக்கு கல்வித்துறைக்கு என பல்வேறு செயற்பாடுகளை முன்னேடுக்கவுள்ளோம். இவ்வாறான பல உதவித்திட்டங்களை எதிர்காலத்தில் வழங்கவுள்ளோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இவ்விடயங்களுக்காக எனக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

You might also like