சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை போராட்டத்தில் கலந்து கொண்ட ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பல நோய்களுக்கு உள்ளாக்கியிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்களின் மீள் வருகைக்காகவே காத்திருக்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை நிலைமாறு கால நீதி செயற்பாட்டின் மூலமோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மூலமோ எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை.

இவை அனைத்தும் இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே மேற்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடு எவ்வாறு உள்ளது எனக் யோலன்டா போஸ்டர் கேள்வி எழுப்பிய போது,

உள்ளூர் அரசியல் தரப்புக்கள், அவ்வவ்போது நாடாளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுகின்றாா்கள். ஆனால் தமக்கு எந்தவிதமான முடிவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாங்கள் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் சர்வதேசத்தை சேர்ந்த பல பிரதிநிதிகள் வந்து சந்தித்து கலந்துரையாடி சென்றுள்ளனர். அவர்களாலும் எதுவும் நடைபெறவில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like