வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறப்பது தொடர்பான கலந்துரையாடல்

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் கிராமிய பெண்கள் அமைப்பு, சர்வ மதக் குழுவினர், கிராம அமைப்புக்களுக்கான முகாமைத்துவ சம்மேளமும் இணைந்து இன்று (04.11.2017) வவுனியா ஒவியா விடுதியில் காணாமல் ஆக்கப்பட்டாேருக்கான அலுவலகம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ் கலந்துரையாடலில் நல்லினக்க செயலனியின் இலங்கைக்கான இணைப்பாளர் சஞ்சிவ குணரத்ன , சிவில் சமுக அமையங்கள் ஒன்றியத்தின் சார்பில் கி.தேவராசா , வவுனியா மாவட்டத்தின் பிரதிநிதியாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கிராம பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் பல தரப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

You might also like