வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை

வவுனியா, வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் நேற்றிரவு (04.11.2017) உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி உட்பட சிறு பணத்தொகையும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இன்று (05.11.2017) காலை வேளை பூஜைக்காக ஆலய கதவை திறக்கும் போதே பூட்டு உடைக்கப்பட்டமை தொடர்பில் தெரிய வந்துள்ளதுடன் உடனடியாக ஆலய நிர்வாக சபையினரால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது

ஆலய மூலஸ்தானம், அலுவலக அறை , உண்டியல் என்பன உடைக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸாருடன் இணைந்து குற்றத்தடவியல் பொலிஸாரும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த 02.11.2017 அன்று வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரகங்கள் விசமிகள் சிலரால் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன் சிலைகள் சில சேதமாக்கப்பட்ட சம்பவமோன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

You might also like