வவுனியாவில் பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலை விழா – 2017

வவுனியா வைரவபுளியங்குளம் பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இன்று (05.11.2017) காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.ஜெயராசா தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் பொ.பாலசுந்தரப்பிள்ளை, சிறப்பு விருந்தினராக பூங்கோதை செல்வராஜன் சிரேஷ்ட விரிவுரையாளர் (வவுனியா வளாகம்) , சு.பரமானந்தம் உப பீடாதிபதி (தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா), கெளரவ விருந்தினராக திருமதி.ச.அருள்வேல் நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), பாரதி முன்பள்ளி அதிபர், ஆசிரியர்கள், பிரமுகர்கள், கலைஞர்கள், பழைய மாணவர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை சிறார்களின் காவடி, பாம்பு நடனம், ஆங்கில பாடல், சிங்கள பாடல், கண்ணன் நடனம், குறவன் குறத்தி நடனம், பிராணிகளின் கொண்டாட்டம், பலே நடனம் போன்ற பல்வேறு நடனங்கள் ஆடல் பாடல்கள் அனைவரையும் மகிழ்விக்க வைத்தது.

இறுதியில் கலை நிகழ்வில் பங்குபற்றிய  மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

You might also like