வவுனியா விபுலாநந்தாக் கல்லூரி புலமைப் பரிசில் கௌரவிப்பு விழா – 2017

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்காக கௌரவிப்பு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று (05.11.2017) பிற்பகல் 2.00மணியளவில் பாடசாலையின் அதிபர் சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான நிகழ்வில் 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிட்சையில் 70புள்ளிகளுக்கு மேல் 169மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 49 மாணவர்களும் பேறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்தனர். அந்த வகையில் அவர்களை கௌரவித்து நினைவுச்சின்னம், சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற காரணமாகவிருந்த ஆசியர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன் , காதர் மஸ்தான் முதன்மை விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் , வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயுரன் , கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர் சுகந்தி கிஷோர் , முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன், மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன், பாடசாலை பழைய மாணவர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like