வவுனியா விபுலானந்த கல்லூரியானது சில வருடங்களாக பல்வேறு விடயங்களில் குழப்பகரமான நிலையில்

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்காக கௌரவிப்பு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று (05.11.2017) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த விழாவை பற்றிய விமர்சனங்களை பழைய மாணவர்களின் முகநூல் பக்கத்தில் பார்க்க கூடியதாக இருந்தது.

இந்த விபுலானந்த கல்லூரியானது சில வருடங்களாக பல்வேறு விடயங்களில் குழப்பகரமான நிலையில் சென்றிருப்பதையும் அதனால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பம் உருவாகியிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல்வாதிகளை அழைக்க கூடாது என்ற கருத்தை கேள்விபட்டேன். அவர்கள் எதை சாதித்தார்கள் அதற்கு நானும் உடன் படுபவனாக இருக்கின்றேன்.

ஏனென்று சொன்னால் இந்த மேடையில் கூட பல அரசியல்வாதிகள் காரணம் என்னமோ தெரியவில்லை குறிப்பாக இங்குள்ள மைதான பிரச்சினை மைதானம் என்றவுடன் இங்கு வருகின்ற பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவருமே இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இன்றும் எத்தனையோ பேர் சொல்லிருக்கலாம் மைதானம் தேவையேன அதற்கும் ஓர் விடிவு வருமா ? என்பதிலும் சந்தேகம் இருக்கின்றது.

அரசியல்வாதி என்றால் வாக்குறுதி வழங்கத்தான் வேண்டும். வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கவில்லை என்றும் மக்கள் ஏற்று கொள்ள கூடியளவிற்கு சொல்ல வேண்டும் சொல்ல தெரிய வேண்டும்.

முயற்சி எடுக்கின்றோம் என்று சொல்லி விட்டு செல்கின்றார்கள். ஆனால் என்ன கட்டத்தில் இருக்கிறது. என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தெரியாது?

தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.  ஆனால் தோல்வி அடைந்தவர்களாக ஆனால் தீர்வு தான் இல்லை

தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத மக்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் தலைவர்களாக தான் இது வரையும் இருக்கின்றார்கள்.

அது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், தலைவர்களாக இருக்கலாம் எல்லோருக்குமே இது பொருந்தும்.

அரசியல் என்பது தவிர்க்க முடியாதது இன்று அரசியல் தேவை ஆனால் அரசியலில் யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் நீங்களாக இருக்க வேண்டும்

அது தான் இங்கு முக்கியம் அதிலே நீங்கள் தவறு செய்தால் தவறான வழியிலே சென்று கொண்டிருக்கும்.

உங்களுக்கு தெரியும் அரசியல் இல்லாமல் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இல்லை, மாதர் அபிவிருத்தி சங்கங்கள் இல்லை, பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் இல்லை, பாடசாலை இல்லை எங்கு என்றாலும் அரசியல் தேவை என்ற நிலை தான் இங்கு இருக்கிறது என தெரிவித்தார்.

இந் நிகழ்விற்கு அரசியல்வாதிகளை அழைத்தமை தொடர்பாக சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் பழைய மாணவர்களினால் பதிவு செய்யப்பட்ட பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன

You might also like