வவுனியா பிரதேச செயலகத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதில் சிரமம்

வவுனியா பிரதேச செயலகத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவான வாகன உரிமையாளர்கள் வாகன வரி அனுமதிப்பத்திரத்தை பெற பிரதேச செயலகத்தை நாடி வருகின்றனர்.

இருப்பினும், கணனி கோளாறு மற்றும் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை என்பவற்றை காரணம் காட்டி குறித்த ஆவணத்தை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அனைவரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டி ஏற்படுவதாகவும், எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி வாகன வரி அனுமதிப்பத்திரத்தை விரைவில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like