யுத்தகாலத்தில் இல்லாத நடைமுறை தற்போது வவுனியாவில்? மக்கள் விசனம்

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கொண்டு செல்வதற்கான தடை தற்போதும் நீடித்து வருவது தொடர்பாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,

மாவட்ட செயலகத்தினுள் பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் நிலையில் காரொன்றில் வந்த நபரொருவர் அங்கு பறந்து கொண்டிருந்த தேசியக்கொடியினை இறக்கி விட்டு சென்றிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் தேடி கைது செய்து விடுவித்திருந்தனர். இதன் பின்னராக மாவட்ட செயலகத்திற்கு எவ்வித வாகனங்களையும் பொது மக்கள் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதுமான இடவசதிகள் உள்ள வவுனியா மாவட்ட செயலகத்தில் வாகனங்களை தரிப்பதற்கு மாவட்ட செயலக அதிகாரிகள் இடமொதுக்க மறுக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில், வங்கிகளின் இலத்திரனியல் பண பரிமாற்று இயந்திரங்களை பொருத்துவதற்கு இடங்களை வழங்கி வருகின்றனர்.

பாதுகாப்பு கடமையில் பொலிஸார், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போது இடம்பெற்ற சம்பவமொன்றுக்காக யுத்த காலத்திலேயே இல்லாத நடைமுறையொன்று தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like