வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (07.11) மாலை 5.30மணியளவில் கேரளா கஞ்சாவுடன் புத்தளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை 5.30மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் எடுத்துவரப்பட்ட கேரளா கஞ்சா 1கிலோ 910கிராமினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சோதனை மேற்கொண்டபோது கைப்பற்றியுள்ளதாகவும்,

குறித்த கஞ்சாவினை எடுத்து வந்த புத்தளத்தை சேர்ந்த 20வயதுடைய தனுஷ்க சம்பத் என்ற இளைஞனை  கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You might also like