கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு நடந்த கதி

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு 6500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

You might also like