கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நபர் கைது
கிளிநொச்சிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 28 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற சந்தேகநபருக்கு 75,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
28 மதுபான போத்தல்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து, அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபருக்கு 75,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளின் உரிமை தொடர்பான விசாரணைக்கு தவணையிடப்பட்டுள்ளது.