கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சிப் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஐந்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்ப்பட்டுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பபட்டுள்ளது.

மேலும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்ததாகவும், இதற்கமைய நேற்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like