கிளிநொச்சியில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கிளிநொச்சிப் பகுதியில் 55 கிராம் கஞ்சாவை தன் வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 55 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like