கிளிநொச்சியில் 365 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
கடும் வறட்சிக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக நாடு பூராகவும் அடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கிளிநொச்சியில் கடந்த 27ம் திகதி முதல் நேற்று வரையான பத்து நாட்களில் 365 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக இரணைமடுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலம் நிலவிய வறட்சிக்கு பின்னர் கடந்த மாதம் 27ம் திகதி முதல் பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
நேற்ற வரையான பத்து நாட்களில் 365 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் 7 அடி 3 அங்குலமாகக் காணப்பட்ட இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 16 அடி 7 அங்குலமாக
உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.