போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பேரணி!

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை, பொருளாதார நடவடிக்கை அமைச்சு ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.

இதன்படி, கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான போதைபொருள் எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்று, தொடர்ந்து அங்கு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில், இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தழுவிய ரீதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like