ஓய்வூதியத்திட்டத்தில் கிளிநொச்சிக்கு தேசிய விருது

சமூக பாதுகாப்புச்சயைின் ஓய்வுதியத்திட்டத்தில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டாம் இடமும், செயற்பாட்டு ரீதியில் முதலாம் இடமும் கிடைத்துள்ளது.

நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகின்ற இத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டம் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்பது (10639) அங்கத்தவர்களை இணைத்து நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த 6ஆம் திகதி கொழும்பு தாமரைத்தடாகத்தில் சமூகசேவைகள் அமைச்சர் எஸ்.பி. திசநாயக்கா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு விருது வழங்கிவைத்தார் .

மாவட்ட செயலக இரு உத்தியோகத்தர்கள், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என கிளிநொச்சி மாவட்டத்தில் 42 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

You might also like