வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் ( முழுமையான படத்தொகுப்பு )

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (09.11.2017) காலை 9.30மணிக்கு நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரி முதல்வர் பா.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக  நிகழ்வில் வரவேற்பு நடனம் , ஆங்கில மற்றும் சிங்களப் பாடல் , நாடகம் , பிரகாசம் சஞ்சிகை வெளியீடு , நூலின் ஆய்வுரை , பரிசளிப்பு வைபவம், பிரதம , கௌரவ விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் , கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பீ.நடராஜ் , வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.கென்னடி , விருந்தினர்களாக சமய மதத்தலைவர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like